• Nov 23 2024

இலங்கையில் அதிகரித்த எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை

HIV
Chithra / Oct 8th 2024, 2:00 pm
image


ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி ஒருவர் அம்பலாங்கொடை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மருத்துவ சிகிச்சை முகாமின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார். 

மாவட்டத்தில் இவ்வருடம் 21 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இருக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொத்தமாக 87 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், கூறினார்.

எச்.ஐ.வி ஒரு குணப்படுத்த இயலாத நோயல்ல என்றும், அது எய்ட்ஸ் நிலைக்கு வளரும் முன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும் என்றும் வைத்திய அதிகாரி மேலும் கூறினார்.

இலங்கையில் அதிகரித்த எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.ஹம்பாந்தோட்டை மாவட்ட பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி ஒருவர் அம்பலாங்கொடை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மருத்துவ சிகிச்சை முகாமின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார். மாவட்டத்தில் இவ்வருடம் 21 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இருக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொத்தமாக 87 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், கூறினார்.எச்.ஐ.வி ஒரு குணப்படுத்த இயலாத நோயல்ல என்றும், அது எய்ட்ஸ் நிலைக்கு வளரும் முன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும் என்றும் வைத்திய அதிகாரி மேலும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement