• Sep 21 2024

இலங்கையில் உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Apr 24th 2023, 10:55 pm
image

Advertisement


கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நாட்டில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கலாம் என மனநல மருத்துவம் மற்றும் மூத்த விரிவுரையாளர் சத்துரி சுரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் சுமார் 100,000 பேரில் 17 பேர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக, 2022ஆம் ஆண்டுகளுக்கான தரவு எதுவும் இதுவரை பெறப்படவில்லை.

எனினும், கடந்த நான்கு மாதங்களில் இந்த எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஆண்டுதோறும் 3,000 பேர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் பதிவாகின்றன, கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது சம்பவங்கள் தினசரி பதிவாகியுள்ளன.

உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இப்போது சிறிது அதிகரித்துள்ளன.

எனவே, குறித்த செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சத்துரி சுரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நாட்டில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கலாம் என மனநல மருத்துவம் மற்றும் மூத்த விரிவுரையாளர் சத்துரி சுரவீர தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் சுமார் 100,000 பேரில் 17 பேர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.துரதிஷ்டவசமாக, 2022ஆம் ஆண்டுகளுக்கான தரவு எதுவும் இதுவரை பெறப்படவில்லை.எனினும், கடந்த நான்கு மாதங்களில் இந்த எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையில் ஆண்டுதோறும் 3,000 பேர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் பதிவாகின்றன, கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது சம்பவங்கள் தினசரி பதிவாகியுள்ளன.உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இப்போது சிறிது அதிகரித்துள்ளன.எனவே, குறித்த செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சத்துரி சுரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement