• Apr 29 2026

நீரில் மூழ்கிய நுவரெலியா; மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 4 பேர் மாயம்

Chithra / Nov 27th 2025, 11:36 am
image

மலையக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று நுவரெலியா நகரத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.


நுவரெலியா புத்த மந்திர மாவத்தை, நுவரெலியா பஸ் நிலையம், ஹவாஎலியா வைத்தியசாலை மாவத்தை உள்ளிட்ட பல முக்கிய வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், பொதுமக்கள் அசௌகரியத்துக்குள்ளாகினர்.


இதற்கிடையில், தலவாக்கலை சென்.கிளயார் தோட்டப் பகுதியில் ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அந்தச் வீதியின் போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என வானிலைவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.


இதேவேளை நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார். 


இரண்டு வீடுகள் மண்சரிவில் சிக்கியதாலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர். 


இதேவேளை, நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக கண்டி மாவட்டத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்தார். 


உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட ஆகிய பகுதிகளிலிருந்தே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

நீரில் மூழ்கிய நுவரெலியா; மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 4 பேர் மாயம் மலையக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று நுவரெலியா நகரத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.நுவரெலியா புத்த மந்திர மாவத்தை, நுவரெலியா பஸ் நிலையம், ஹவாஎலியா வைத்தியசாலை மாவத்தை உள்ளிட்ட பல முக்கிய வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், பொதுமக்கள் அசௌகரியத்துக்குள்ளாகினர்.இதற்கிடையில், தலவாக்கலை சென்.கிளயார் தோட்டப் பகுதியில் ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அந்தச் வீதியின் போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என வானிலைவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.இதேவேளை நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார். இரண்டு வீடுகள் மண்சரிவில் சிக்கியதாலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக கண்டி மாவட்டத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்தார். உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட ஆகிய பகுதிகளிலிருந்தே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement