எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மக்கள் போராட்டக் கூட்டணியின் பிரதிநிதி லஹிரு வீரசேகர இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் சமத்துவ மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், பொது மக்களின் போராட்டத்தில் தனது தொழில் வாழ்க்கையிலும் வெளியிலும் தனது வாழ்க்கையை கூர்மைப்படுத்திய நுவான் போபகே தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அத்துடன் 2017ஆம் ஆண்டு மெதொட்டமுல்ல அனர்த்தத்தை ஏற்படுத்திய கொலன்னாவ குப்பை மேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளராக நுவான் போபகே 2009ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2023 ஆம் ஆண்டு, தனது குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் குடியுரிமையை இலங்கையர் என்று பதிவு செய்ய அவர் தலையிட்டு இருந்தமையும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
அரகலய போராட்ட குழுவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நுவான் போபகே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மக்கள் போராட்டக் கூட்டணியின் பிரதிநிதி லஹிரு வீரசேகர இதனைத் தெரிவித்தார்.தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் சமத்துவ மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், பொது மக்களின் போராட்டத்தில் தனது தொழில் வாழ்க்கையிலும் வெளியிலும் தனது வாழ்க்கையை கூர்மைப்படுத்திய நுவான் போபகே தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.அத்துடன் 2017ஆம் ஆண்டு மெதொட்டமுல்ல அனர்த்தத்தை ஏற்படுத்திய கொலன்னாவ குப்பை மேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளராக நுவான் போபகே 2009ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதேவேளை 2023 ஆம் ஆண்டு, தனது குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் குடியுரிமையை இலங்கையர் என்று பதிவு செய்ய அவர் தலையிட்டு இருந்தமையும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது