• Oct 19 2024

சுற்றுலா விடுதியாக மாறும் நுவரெலியா தபாலகம்..! எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 1:48 pm
image

Advertisement

நுவரெலியாவில் மிகவும் பழமைவாய்ந்த நுவரெலியா  பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா  விடுதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்க ஊழியர்களும் நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்களும் பொது மக்களும் இணைந்து நேற்று (21) புதன்கிழமை நன்பகல் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நுவரெலியாவில் நடத்தினார்கள்.

நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி நுவரெலியா எலிசபெத் மகாராணி வீதி, லோசன் வீதி, உடபுஸல்லாவ வீதி வழியாக நுவரெலியா மாவட்ட செயலகம் சென்று தங்களது எதிர்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜீர் ஒன்றை நுவரெலியா மாவட்ட  மேலதிக செயலாளரான திருமதி போதிமானவிடம் கையளித்தனர்.

அதனை தொடர்ந்து எதிர்ப்பு பேரணி நுவரெலியா புதிய கடை வீதி வழியாக மீண்டும் நுவரெலியா பிரதான தபாலகம் அருகில் சென்று தங்களது எதிர்ப்பு போராட்டத்திற்கான கருத்துகளை தபால் தொழிற்சங்க தலைவர்களும் மத குருமார்களும் போராட்டத்தி கலந்துக்கொண்டவர்களுக்கு தெழிவுபடுத்திய பின் எதிர்ப்பு கூட்டம் கலைந்து சென்றது.

போராட்டம் நடைபெற்ற பொழுது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவண்ணம் நுவரெலியா பொலிஸார் பாதுகாப்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.




சுற்றுலா விடுதியாக மாறும் நுவரெலியா தபாலகம். எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.samugammedia நுவரெலியாவில் மிகவும் பழமைவாய்ந்த நுவரெலியா  பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா  விடுதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்க ஊழியர்களும் நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்களும் பொது மக்களும் இணைந்து நேற்று (21) புதன்கிழமை நன்பகல் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நுவரெலியாவில் நடத்தினார்கள்.நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி நுவரெலியா எலிசபெத் மகாராணி வீதி, லோசன் வீதி, உடபுஸல்லாவ வீதி வழியாக நுவரெலியா மாவட்ட செயலகம் சென்று தங்களது எதிர்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜீர் ஒன்றை நுவரெலியா மாவட்ட  மேலதிக செயலாளரான திருமதி போதிமானவிடம் கையளித்தனர். அதனை தொடர்ந்து எதிர்ப்பு பேரணி நுவரெலியா புதிய கடை வீதி வழியாக மீண்டும் நுவரெலியா பிரதான தபாலகம் அருகில் சென்று தங்களது எதிர்ப்பு போராட்டத்திற்கான கருத்துகளை தபால் தொழிற்சங்க தலைவர்களும் மத குருமார்களும் போராட்டத்தி கலந்துக்கொண்டவர்களுக்கு தெழிவுபடுத்திய பின் எதிர்ப்பு கூட்டம் கலைந்து சென்றது.போராட்டம் நடைபெற்ற பொழுது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவண்ணம் நுவரெலியா பொலிஸார் பாதுகாப்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement