• Nov 22 2024

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்..!

Sharmi / Jul 30th 2024, 5:04 pm
image

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான  இடைக்கால  செயலகத்தின் (ISTRM) உத்தியோகப்பூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி  செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.  

இடைக்கால செயலகத்தின்  முன்னேற்றம் குறித்து அக்கறை காட்டுவோருக்கான பிரதான தகவல் மூலமாக இந்த இணையத்தளம் செயற்படும். 

இதுகுறித்த அறிக்கையை இந்த  இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும்.

1983 - 2009 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மோதல் நிலைமைகள் தொடர்பில் நிலைமாறுகால நீதியை செயற்படுத்தல் மற்றும் அதன்போதான நீண்டகால பாதிப்புக்களுக்கு தீர்வுகளை வலியுறுத்தும் அறிக்கையும் இணைய பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

இந்த விடயங்களை வர்த்தமானியில் அறிவித்து பாராளுமன்றத்தில் சமர்பிக்கும் முன்னர் அது குறித்து சகல தரப்பினரதும் இணக்கப்பாடுகள் மற்றும் திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட சமூகத்தில் பல்வேறு அமைப்புக்களிடமிருந்த பெறப்பட்ட மற்றும் சர்வதேச பிரதிநிதிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

பாதிக்கப்பட்ட மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்குத்  தேவையான ஆதரவை வழங்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான  இடைக்கால  செயலகத்தின் (ISTRM) உத்தியோகப்பூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி  செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.  இடைக்கால செயலகத்தின்  முன்னேற்றம் குறித்து அக்கறை காட்டுவோருக்கான பிரதான தகவல் மூலமாக இந்த இணையத்தளம் செயற்படும்.  இதுகுறித்த அறிக்கையை இந்த  இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும்.1983 - 2009 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மோதல் நிலைமைகள் தொடர்பில் நிலைமாறுகால நீதியை செயற்படுத்தல் மற்றும் அதன்போதான நீண்டகால பாதிப்புக்களுக்கு தீர்வுகளை வலியுறுத்தும் அறிக்கையும் இணைய பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த விடயங்களை வர்த்தமானியில் அறிவித்து பாராளுமன்றத்தில் சமர்பிக்கும் முன்னர் அது குறித்து சகல தரப்பினரதும் இணக்கப்பாடுகள் மற்றும் திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட சமூகத்தில் பல்வேறு அமைப்புக்களிடமிருந்த பெறப்பட்ட மற்றும் சர்வதேச பிரதிநிதிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்குத்  தேவையான ஆதரவை வழங்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement