பால்டிக் கடல் கடற்கரையில் எண்ணெய் ஏற்றிக் கொண்டு பயணித்த கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மன் கொடியுடன் கூடிய அன்னிகா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கடல்சார் மீட்பு சேவைக்கு எச்சரிக்கப்பட்டது.
இதனையடுத்து கப்பலில் இருந்த 07 பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுமார் 640 மெட்ரிக் டன் எண்ணெயை ஏற்றிச் சென்ற டேங்கரில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் கப்பல் நிலையாக இருப்பதாக அறிவித்த அதிகாரிகள் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்
பால்டிக் கடற் பகுதியில் தீப்பிடித்து எரிந்த எண்ணெய் கப்பல் பால்டிக் கடல் கடற்கரையில் எண்ணெய் ஏற்றிக் கொண்டு பயணித்த கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஜேர்மன் கொடியுடன் கூடிய அன்னிகா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கடல்சார் மீட்பு சேவைக்கு எச்சரிக்கப்பட்டது.இதனையடுத்து கப்பலில் இருந்த 07 பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.சுமார் 640 மெட்ரிக் டன் எண்ணெயை ஏற்றிச் சென்ற டேங்கரில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.எவ்வாறாயினும் கப்பல் நிலையாக இருப்பதாக அறிவித்த அதிகாரிகள் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்