• May 01 2024

ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபு இலங்கையில் அடையாளம்...! நாடு முடக்கப்படும் சாத்தியம்? samugammedia

Sharmi / Dec 22nd 2023, 10:02 am
image

Advertisement

ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது, இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

கொவிட்-19 சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன.

அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சலும் பரவும் நிலையில், தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமானால், அது தொடர்பில், பொதுமக்கள் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபு இலங்கையில் அடையாளம். நாடு முடக்கப்படும் சாத்தியம் samugammedia ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது, இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.கொவிட்-19 சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன.அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சலும் பரவும் நிலையில், தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமானால், அது தொடர்பில், பொதுமக்கள் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement