• Apr 03 2025

ஏப்ரல் 7 ஆம் திகதி உங்கள்நிழல் மறைந்து விடும்; வானியலாளர் வெளியிட்ட தகவல்

Chithra / Apr 2nd 2025, 7:44 am
image

 

எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி, திங்கட்கிழமை மதியம் 12:12 மணிக்கு சூரியன் கொழும்புக்கு நேராக உச்சம் கொடுக்கும் என்றும், இதனால் செங்குத்து நிழல்கள் சிறிது நேரத்தில் மறைந்து விடும் என்றும் வானியலாளர் அனுர சி. பெரேரா கூறியுள்ளார்.

இது உண்மையில் ஒரு ஒளியியல் மாயையாக இருக்கும் என்று பெரேரா விளக்கியுள்ளார். 

ஏப்ரல் முதல் இரண்டு வாரங்கள் சூரியன் இலங்கையின் மீது நேரடியாக உச்சம் கொடுக்கிறது.

இதன் விளைவாக அதிகபட்ச சூரிய வெப்பம் ஏற்படும். இதன்படி ஏப்ரல் 5 முதல் 15ஆம் திகதி வரை, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும்.


“உச்ச சூரியன்” அல்லது “சூரியன் நேரடியாக உச்சம்” என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு ஏப்ரல் 4ஆம் திகதி பருத்தித்துறையில் நிகழும்.

எல்பிட்டியவில் ஏப்ரல் 5ஆம் திகதியும், களுத்துறையில் ஏப்ரல் 6ஆம் திகதியும், கொழும்பு மற்றும் களனி ஆகிய இடங்களில் ஏப்ரல் 7ஆம் திகதியும் மஹியங்கனையில் ஏப்ரல் 8 ஆம் திகதியும் சூரியனின் நேரடி உச்சம் நிகழவுள்ளது.

இந்தநிலையில், ஏப்ரல் 15ஆம் திகதியன்று சூரியனின் உச்சம் நாட்டைக் கடந்துச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 7 ஆம் திகதி உங்கள்நிழல் மறைந்து விடும்; வானியலாளர் வெளியிட்ட தகவல்  எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி, திங்கட்கிழமை மதியம் 12:12 மணிக்கு சூரியன் கொழும்புக்கு நேராக உச்சம் கொடுக்கும் என்றும், இதனால் செங்குத்து நிழல்கள் சிறிது நேரத்தில் மறைந்து விடும் என்றும் வானியலாளர் அனுர சி. பெரேரா கூறியுள்ளார்.இது உண்மையில் ஒரு ஒளியியல் மாயையாக இருக்கும் என்று பெரேரா விளக்கியுள்ளார். ஏப்ரல் முதல் இரண்டு வாரங்கள் சூரியன் இலங்கையின் மீது நேரடியாக உச்சம் கொடுக்கிறது.இதன் விளைவாக அதிகபட்ச சூரிய வெப்பம் ஏற்படும். இதன்படி ஏப்ரல் 5 முதல் 15ஆம் திகதி வரை, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும்.“உச்ச சூரியன்” அல்லது “சூரியன் நேரடியாக உச்சம்” என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு ஏப்ரல் 4ஆம் திகதி பருத்தித்துறையில் நிகழும்.எல்பிட்டியவில் ஏப்ரல் 5ஆம் திகதியும், களுத்துறையில் ஏப்ரல் 6ஆம் திகதியும், கொழும்பு மற்றும் களனி ஆகிய இடங்களில் ஏப்ரல் 7ஆம் திகதியும் மஹியங்கனையில் ஏப்ரல் 8 ஆம் திகதியும் சூரியனின் நேரடி உச்சம் நிகழவுள்ளது.இந்தநிலையில், ஏப்ரல் 15ஆம் திகதியன்று சூரியனின் உச்சம் நாட்டைக் கடந்துச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement