போலியான டொலர் நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது 06 போலி டொலர் நாணயத்தாள்களை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ரஸ்நாயக்கபுர பகுதியை சேர்ந்த 45 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
போலியான டொலர்களுடன் ஒருவர் கைது போலியான டொலர் நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது 06 போலி டொலர் நாணயத்தாள்களை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ரஸ்நாயக்கபுர பகுதியை சேர்ந்த 45 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.