• Jul 05 2025

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

shanuja / Jul 5th 2025, 5:04 pm
image

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு  வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார். 



பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கைது செய்யப்பட்டவர்  காலி வீதி - பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர். சந்தேகநபரிடமிருந்து 700 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு  வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்  காலி வீதி - பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர். சந்தேகநபரிடமிருந்து 700 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement