• Sep 20 2024

சாரதியின் தூக்ககலக்கத்தால் வர்த்தக நிலையத்துள் புகுந்த லொறி;ஒருவர் உயிரிழப்பு !

Tamil nila / Jan 14th 2023, 11:22 pm
image

Advertisement

கொழும்பு - சிலாபம் வீதியின் நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


விபத்தின் போது கடைக்கு முன்னால் இருந்த இருவர் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது அமர்ந்திருந்த பெரியமுல்லைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​லொறி திடீரென இடது பக்கமாக சென்று வர்த்தக நிலையம் ஒன்றின்மீது மோதியது.இதன் காரணமாக , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியின் மீது வர்த்தக நிலையத்தின் சுவர்கள் மற்றும் கூரைகள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.


முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


லொறியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட லொறி சாரதியை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.


சாரதியின் தூக்ககலக்கத்தால் வர்த்தக நிலையத்துள் புகுந்த லொறி;ஒருவர் உயிரிழப்பு கொழும்பு - சிலாபம் வீதியின் நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .விபத்தின் போது கடைக்கு முன்னால் இருந்த இருவர் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது அமர்ந்திருந்த பெரியமுல்லைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​லொறி திடீரென இடது பக்கமாக சென்று வர்த்தக நிலையம் ஒன்றின்மீது மோதியது.இதன் காரணமாக , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியின் மீது வர்த்தக நிலையத்தின் சுவர்கள் மற்றும் கூரைகள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.லொறியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட லொறி சாரதியை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement