• Jun 17 2024

யாத்திரைக்கு சென்றபோது துயரம் - கோர விபத்தில் ஒருவர் சாவு! - 13 பேர் வைத்தியசாலையில்

Chithra / May 26th 2024, 12:29 pm
image

Advertisement

கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து  இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் மோதி வீதியை விட்டு விலகி மீண்டும் மரத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் சுமார் 14 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது  வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன்,  காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யாத்திரைக்கு சென்றபோது துயரம் - கோர விபத்தில் ஒருவர் சாவு - 13 பேர் வைத்தியசாலையில் கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து  இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் மோதி வீதியை விட்டு விலகி மீண்டும் மரத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது வேனில் சுமார் 14 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது  வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன்,  காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement