• Feb 27 2026

நான்கு மாதங்களில் ஒரு லட்சம் பேர் கைது! பெருமளவு போதைப்பொருள்களும் மீட்பு

Chithra / Feb 26th 2026, 8:31 am
image

 

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எவ்.யு.வூட்லர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த நான்கு மாதங்களாக போதைப்பொருள் ஒழிப்புச் செயற்றிட்டம் மிகவும் ஆக்கபூர்வமான முறையில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இக்காலப்பகுதியில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்புகளின் போது மீட்கப்பட்ட போதைப்பொருள்களின் விவரங்கள் பின்வருமாறு:-

* ஹெரோய்ன்: 526 கிலோ கிராம் * ஐஸ்: 1,419 கிலோ கிராம் * கஞ்சா: 3,548 கிலோ கிராம்

கைது செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 400 பேருக்கு எதிராக நீதிமன்றங்கள் ஊடாகத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோத சொத்துக் குவிப்புத் தொடர்பில் 146 விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நான்கு மாதங்களில் ஒரு லட்சம் பேர் கைது பெருமளவு போதைப்பொருள்களும் மீட்பு  இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எவ்.யு.வூட்லர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த நான்கு மாதங்களாக போதைப்பொருள் ஒழிப்புச் செயற்றிட்டம் மிகவும் ஆக்கபூர்வமான முறையில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.இக்காலப்பகுதியில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றிவளைப்புகளின் போது மீட்கப்பட்ட போதைப்பொருள்களின் விவரங்கள் பின்வருமாறு:-* ஹெரோய்ன்: 526 கிலோ கிராம் * ஐஸ்: 1,419 கிலோ கிராம் * கஞ்சா: 3,548 கிலோ கிராம்கைது செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 400 பேருக்கு எதிராக நீதிமன்றங்கள் ஊடாகத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோத சொத்துக் குவிப்புத் தொடர்பில் 146 விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement