• May 01 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய்...!samugammedia

Sharmi / Jan 12th 2024, 12:21 pm
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடரும் போது பயன்படுத்தக் கூடியவாறு ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நிலையான வைப்பினை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் நகர குடிசன அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்றல் கேள்வி நேரத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,


கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கத்தோலிக்க திருச்சபையின் சமூக சேவை நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைவாக கட்டுவாபிட்டிய மற்றும் கொச்சிக்கடை தேவாலய தாக்குதல்களில் பெற்றோரை இழந்த 7 பிள்ளைகளுக்கு நிதி அளிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையில் கல்வி நடவடிக்கைக்காக மாதம் 5 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு வருட காலத்துக்கு பெற்றுக் கொள்ள  நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய்.samugammedia உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடரும் போது பயன்படுத்தக் கூடியவாறு ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நிலையான வைப்பினை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் நகர குடிசன அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்றல் கேள்வி நேரத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கத்தோலிக்க திருச்சபையின் சமூக சேவை நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைவாக கட்டுவாபிட்டிய மற்றும் கொச்சிக்கடை தேவாலய தாக்குதல்களில் பெற்றோரை இழந்த 7 பிள்ளைகளுக்கு நிதி அளிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையில் கல்வி நடவடிக்கைக்காக மாதம் 5 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு வருட காலத்துக்கு பெற்றுக் கொள்ள  நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement