• Apr 19 2026

பாணந்துறையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் கொலை!

shanu / Mar 30th 2026, 10:31 am
image

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு  ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


இந்தச் சம்பவம் பாணந்துறை பிங்வத்த, லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


இவ்வாறு உயிரிழந்தவர் பிங்வத்த, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 


குறித்த நபருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக்கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் காயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 


சம்பவத்தையடுத்து சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பிங்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாணந்துறையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் கொலை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு  ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்தச் சம்பவம் பாணந்துறை பிங்வத்த, லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பிங்வத்த, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த நபருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக்கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் காயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தையடுத்து சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பிங்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement