கஹவத்தை - நீலகாமம் வீதியில் மணிக்கக்கல் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளமை குறித்து கஹவத்தை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கஹவத்தை, கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை (28) நண்பகல் வேளையில் குறித்த மணிக்கக்கல் தொழிலதிபர் கஹவத்தை - நீலகாமம் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், நீலகாமம் வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல்போனவரின் கையடக்கத் தொலைபேசி, குறித்த வீதிக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) கண்டெடுக்கப்பட்டது.
காணாமல்போனவரைத் தேடும் பணிகளுக்காக பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மர்மமான முறையில் மாயமான மணிக்கக்கல் தொழிலதிபர்; தேயிலைத் தோட்டத்தில் தொலைபேசி மீட்பு கஹவத்தை - நீலகாமம் வீதியில் மணிக்கக்கல் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளமை குறித்து கஹவத்தை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கஹவத்தை, கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.நேற்று முன்தினம் சனிக்கிழமை (28) நண்பகல் வேளையில் குறித்த மணிக்கக்கல் தொழிலதிபர் கஹவத்தை - நீலகாமம் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், நீலகாமம் வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.காணாமல்போனவரின் கையடக்கத் தொலைபேசி, குறித்த வீதிக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) கண்டெடுக்கப்பட்டது.காணாமல்போனவரைத் தேடும் பணிகளுக்காக பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.