• Nov 25 2024

நிகழ்நிலை காப்புச் சட்டம்: சுமந்திரனின் மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரித்த உயர் நீதிமன்றம்!

Chithra / Feb 29th 2024, 12:30 pm
image

 

நிகழ்நிலை காப்புச் சட்டம்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்துக்கு  முரணானது என தீர்ப்பளிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரன் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாலேயே இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் இதில் இடம்பெறாத காரணத்தினால் சட்டபூர்வமாக சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பு வழங்குமாறு கோரி நாடாளுமன்ற   உறுப்பினர் சுமந்திரன் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.

நிகழ்நிலை காப்புச் சட்டம்: சுமந்திரனின் மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரித்த உயர் நீதிமன்றம்  நிகழ்நிலை காப்புச் சட்டம்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்துக்கு  முரணானது என தீர்ப்பளிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரன் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது.பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாலேயே இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் இதில் இடம்பெறாத காரணத்தினால் சட்டபூர்வமாக சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பு வழங்குமாறு கோரி நாடாளுமன்ற   உறுப்பினர் சுமந்திரன் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement