இலங்கை அரச மேகக்கணிமை சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
பாதிக்கப்பட்ட சேவைகளில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர்ந்த) இணையவழி வருமான வரி அனுமதிப் பத்திர முறைமை,
பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு, வர்த்தகத் திணைக்களத்தின் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டுக்கான சான்றிதழ் வழங்கும் இணையவழி அமைப்பு, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதியக் கட்டமைப்பு, இ-உள்ளூராட்சி அமைப்பு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம், இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்களும் அடங்குகின்றன.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) பொறியியலாளர்களும் சேவை வழங்குநர்களும், இந்த கிளவுட் சேவைகளை விரைவில் வழமைக்குக் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்களை விநியோகிப்பதற்கான நிகழ்நிலை சேவை செயலிழந்துள்ளது.
இதனால் குறித்த சான்றிதழ்களைப் பிரதேச செயலகங்களில் சாதாரண சேவையூடாக பெற்றுக் கொள்ள முடியும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
பல அரச நிறுவனங்களின் இணையவழி சேவைகள் பாதிப்பு; மீட்டெடுக்க விசேட கூட்டம் இலங்கை அரச மேகக்கணிமை சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.பாதிக்கப்பட்ட சேவைகளில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர்ந்த) இணையவழி வருமான வரி அனுமதிப் பத்திர முறைமை, பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு, வர்த்தகத் திணைக்களத்தின் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டுக்கான சான்றிதழ் வழங்கும் இணையவழி அமைப்பு, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதியக் கட்டமைப்பு, இ-உள்ளூராட்சி அமைப்பு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம், இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்களும் அடங்குகின்றன.தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) பொறியியலாளர்களும் சேவை வழங்குநர்களும், இந்த கிளவுட் சேவைகளை விரைவில் வழமைக்குக் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்களை விநியோகிப்பதற்கான நிகழ்நிலை சேவை செயலிழந்துள்ளது. இதனால் குறித்த சான்றிதழ்களைப் பிரதேச செயலகங்களில் சாதாரண சேவையூடாக பெற்றுக் கொள்ள முடியும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.