• May 24 2026

நாட்டில் இன்று பலத்த மழை; 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Chithra / Oct 14th 2025, 9:12 am
image

 

தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், பதுளை, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. வரையிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டில் இன்று பலத்த மழை; 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை  தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.அத்துடன், பதுளை, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. வரையிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement