யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழியலுக்கென்று தனிப் நூலகப்பிரிவொன்று நேற்றையதினம்(29) திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழியல் சேகரிப்புகளை எண்ணிமப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் செயற்றிட்டத்தின் கீழ், எண்ணிம ஆவணக் காப்பகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில்; காணப்படக் கூடிய தமிழியல் சார்ந்த தொகுப்புக்களைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும், தமிழியல் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி முதலான அறிவுசார் செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலமைந்த நூலகத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, நன்கொடையாளர் சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் தமிழியல் நூலகப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்நூலகப் பிரிவைத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
யாழ்.பல்கலை நூலகத்தில் தமிழியல் நூலகப் பிரிவு திறப்பு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழியலுக்கென்று தனிப் நூலகப்பிரிவொன்று நேற்றையதினம்(29) திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழியல் சேகரிப்புகளை எண்ணிமப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் செயற்றிட்டத்தின் கீழ், எண்ணிம ஆவணக் காப்பகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.தேசிய மற்றும் சர்வதேச ரீதியில்; காணப்படக் கூடிய தமிழியல் சார்ந்த தொகுப்புக்களைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும், தமிழியல் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி முதலான அறிவுசார் செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலமைந்த நூலகத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, நன்கொடையாளர் சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் தமிழியல் நூலகப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்நூலகப் பிரிவைத் திறந்து வைத்தார். நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.