• May 30 2026

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா, மன்னார் உப பிராந்திய அலுவலகம் திறப்பு!

shanu / May 29th 2026, 3:46 pm
image



நகர அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா, மன்னார் உப பிராந்திய அலுவலகம், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் (05-29) திறந்து வைக்கப்பட்டது.


போக்குவரத்து,  நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இந்த அலுவலகத்தின் மூலம், எதிர்காலத்தில் வவுனியா மற்றும் மன்னார் நகரங்களை அபிவிருத்தி செய்யும் போது, கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப திட்ட அனுமதிகளை (Clearance) பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல சேவைகளை இலகுவாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த உப பிராந்திய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.


‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டளவில் வவுனியா நகரத்தை வட மாகாணத்தின் வர்த்தக மற்றும் வணிக மையமாகவும், பிரதான நுழைவாயிலாகவும் நகர அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மன்னார் மாவட்டத்தின் பிரதான நகரமான மன்னார் நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் வலயத்தையும் அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.கே. ஹேமச்சந்திர, மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பிராந்திய பணிப்பாளர் சமன் திஸாநாயக்க ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா, மன்னார் உப பிராந்திய அலுவலகம் திறப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா, மன்னார் உப பிராந்திய அலுவலகம், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் (05-29) திறந்து வைக்கப்பட்டது.போக்குவரத்து,  நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இந்த அலுவலகத்தின் மூலம், எதிர்காலத்தில் வவுனியா மற்றும் மன்னார் நகரங்களை அபிவிருத்தி செய்யும் போது, கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப திட்ட அனுமதிகளை (Clearance) பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல சேவைகளை இலகுவாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த உப பிராந்திய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டளவில் வவுனியா நகரத்தை வட மாகாணத்தின் வர்த்தக மற்றும் வணிக மையமாகவும், பிரதான நுழைவாயிலாகவும் நகர அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மன்னார் மாவட்டத்தின் பிரதான நகரமான மன்னார் நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் வலயத்தையும் அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.கே. ஹேமச்சந்திர, மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பிராந்திய பணிப்பாளர் சமன் திஸாநாயக்க ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement