• May 05 2026

மாணவியை குறிவைத்த இளைஞர்கள்; முள்ளியவளையில் தொடரும் திருட்டால் அச்சத்தில் மக்கள்

Chithra / May 5th 2026, 9:12 pm
image

முள்ளியவளையில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு இரு இளைஞர்கள் தப்பிச் சென்ற சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.


இன்றையதினம்  மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இலக்கத்தகடு இன்றி விலைகூடிய மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இரு இளைஞர்கள், மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இதே பகுதிக்கு அண்மித்த பகுதியில் கடந்த வாரமும் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது. 


இதனால், தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் குறித்து பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


இதுவரை சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறிவருகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை கண்டறியும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


வீதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் திரியும் நபர்கள் மீது பொலிஸார் தீவிர ரோந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மாணவியை குறிவைத்த இளைஞர்கள்; முள்ளியவளையில் தொடரும் திருட்டால் அச்சத்தில் மக்கள் முள்ளியவளையில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு இரு இளைஞர்கள் தப்பிச் சென்ற சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.இன்றையதினம்  மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இலக்கத்தகடு இன்றி விலைகூடிய மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இரு இளைஞர்கள், மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதே பகுதிக்கு அண்மித்த பகுதியில் கடந்த வாரமும் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது. இதனால், தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் குறித்து பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இதுவரை சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறிவருகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை கண்டறியும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.வீதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் திரியும் நபர்கள் மீது பொலிஸார் தீவிர ரோந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement