• Dec 09 2024

இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு...! கொலம்பியாவில் பல்கலைக்கழக அரங்கை முற்றுகையிட்ட மாணவர்கள்...!

Sharmi / May 1st 2024, 11:51 am
image

கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காஸா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் மையப்பகுதியான  கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறியும் போராட்டம் தொடர்ந்தது.

இதனால், நியூயார்க் காவல்துறையினர் மாணவர்களின் போராட்டத்தை கலைக்க முயற்சித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டடமான ஹாமில்டன் அரங்கை கைப்பற்றி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி வந்தனர்.

அத்துடன் ஹாமில்டன் கட்டடத்தில் பறக்கவிடப்பட்டிருந்த அமெரிக்க கொடியை அகற்றி பாலத்தீன கொடியை பறக்கவிட்டனர் .

இதனால் அங்கு  பரபரப்பு நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 1968-ஆம் ஆண்டில் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தின்போது ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்களில் ஹாமில்டன் அரங்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் போட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தல், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மன்னிப்பு ஆகிய 3 கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்குக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் வந்த காவல்துறையினர், இரண்டாவது மாடியின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து மாணவர்களை கைது செய்தனர்.

மாணவர்களின் கைகளை கட்டி ஒவ்வொருவராக மாடியில் இருந்து கீழே இறக்கிய காவலர்கள் வாகனங்கள் மூலம் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

மாணவர்கள் வெளியேறும்போது “பாலஸ்தீனத்தை விடுவியுங்கள்” என்று முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொலம்பியா பல்கலைக்கழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.



இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு. கொலம்பியாவில் பல்கலைக்கழக அரங்கை முற்றுகையிட்ட மாணவர்கள். கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காஸா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தின் மையப்பகுதியான  கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறியும் போராட்டம் தொடர்ந்தது.இதனால், நியூயார்க் காவல்துறையினர் மாணவர்களின் போராட்டத்தை கலைக்க முயற்சித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டடமான ஹாமில்டன் அரங்கை கைப்பற்றி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி வந்தனர்.அத்துடன் ஹாமில்டன் கட்டடத்தில் பறக்கவிடப்பட்டிருந்த அமெரிக்க கொடியை அகற்றி பாலத்தீன கொடியை பறக்கவிட்டனர் .இதனால் அங்கு  பரபரப்பு நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.கடந்த 1968-ஆம் ஆண்டில் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தின்போது ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்களில் ஹாமில்டன் அரங்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் போட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தல், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மன்னிப்பு ஆகிய 3 கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்குக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் வந்த காவல்துறையினர், இரண்டாவது மாடியின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து மாணவர்களை கைது செய்தனர்.மாணவர்களின் கைகளை கட்டி ஒவ்வொருவராக மாடியில் இருந்து கீழே இறக்கிய காவலர்கள் வாகனங்கள் மூலம் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.மாணவர்கள் வெளியேறும்போது “பாலஸ்தீனத்தை விடுவியுங்கள்” என்று முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, கொலம்பியா பல்கலைக்கழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement