மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களது இன்னல்கள் நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வாக்குகளை அபகரித்து அரசியல் செய்வது எமது நோக்கமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் இன்றையதினம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மல்லாகம் அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில் போடியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தெளிவூட்டல்கள் அமைய வேண்டும் என வலுயுறுத்தியதுடன் அதற்கான கடின உழைப்பு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குறித்த கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில்,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னரான இன்றைய சூழலுக்கேற்ற பொறிமுறைகளுடன் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது உள்ளூர் அதிகார சபை தேர்தல் வந்துள்ளது. இது பிரதேசங்க்ளின் அபிவிருத்திக்கான ஒரு தேர்தல். இது மக்களின் தேவைகளை முன்னிறுத்திய ஒன்றாக இருப்பதால் மக்கள் தமக்கான பிரதினிதிகளை வெற்றிபெறச் செய்வது அவசியமாகும்.
இந்நேரம் ஈழ் மக்கள் ஜனநாயக கட்சி கடந்த காலங்களில் மக்களுக்காக குறிப்பாக மீள் குடியேற்றம் உள்ளிட்ட,அதிகளவாக சேவைகளையும் , அனுபவங்களையும் இப்பிரதேச மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது
அந்தவகையில் மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு, மக்கள் நலன்களுக்காக சேவையாற்றிய எமது கட்சியின் வேட்பாளர்களை இம்முறை காலச் சூழலுக்கேற்ப வெற்றிபெறச் செய்து இப்பகுதி மக்கள் தமது வாழ்வியலை வழப்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.
மக்கள் எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படுவதே எமது நோக்கம் - ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களது இன்னல்கள் நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வாக்குகளை அபகரித்து அரசியல் செய்வது எமது நோக்கமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் இன்றையதினம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மல்லாகம் அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில் போடியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தெளிவூட்டல்கள் அமைய வேண்டும் என வலுயுறுத்தியதுடன் அதற்கான கடின உழைப்பு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.குறித்த கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில்,நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னரான இன்றைய சூழலுக்கேற்ற பொறிமுறைகளுடன் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தற்போது உள்ளூர் அதிகார சபை தேர்தல் வந்துள்ளது. இது பிரதேசங்க்ளின் அபிவிருத்திக்கான ஒரு தேர்தல். இது மக்களின் தேவைகளை முன்னிறுத்திய ஒன்றாக இருப்பதால் மக்கள் தமக்கான பிரதினிதிகளை வெற்றிபெறச் செய்வது அவசியமாகும்.இந்நேரம் ஈழ் மக்கள் ஜனநாயக கட்சி கடந்த காலங்களில் மக்களுக்காக குறிப்பாக மீள் குடியேற்றம் உள்ளிட்ட,அதிகளவாக சேவைகளையும் , அனுபவங்களையும் இப்பிரதேச மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதுஅந்தவகையில் மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு, மக்கள் நலன்களுக்காக சேவையாற்றிய எமது கட்சியின் வேட்பாளர்களை இம்முறை காலச் சூழலுக்கேற்ப வெற்றிபெறச் செய்து இப்பகுதி மக்கள் தமது வாழ்வியலை வழப்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.