• Nov 23 2024

ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளரே மகுடம் சூடுவார்...! மேதினத்தில் மஹிந்த சூளுரை...!

Sharmi / May 2nd 2024, 8:30 am
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொரளை கெம்பல் மைதானத்தில்  நேற்றையதினம் இடம்பெற்ற  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணத்தை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்த அவர், 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த மே பேரணியின் மூலம் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், போராடி வரும் பொதுஜன பெரமுன வலுவடைந்து வருவதை நாடு முழுவதிலுமிருந்து கேம்பல் பிட்டியவில் கூடிய மக்கள் நிரூபித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் தம்மையும் தனது அணியினரையும் திருடர்கள் என அவதூறு செய்து நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், மக்களின் அபிலாஷைகளுக்காக தான் அந்த சவால்களை எல்லாம் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளரே மகுடம் சூடுவார். மேதினத்தில் மஹிந்த சூளுரை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பொரளை கெம்பல் மைதானத்தில்  நேற்றையதினம் இடம்பெற்ற  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணத்தை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த மே பேரணியின் மூலம் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், போராடி வரும் பொதுஜன பெரமுன வலுவடைந்து வருவதை நாடு முழுவதிலுமிருந்து கேம்பல் பிட்டியவில் கூடிய மக்கள் நிரூபித்து வருவதாகவும் தெரிவித்தார்.பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் தம்மையும் தனது அணியினரையும் திருடர்கள் என அவதூறு செய்து நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், மக்களின் அபிலாஷைகளுக்காக தான் அந்த சவால்களை எல்லாம் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement