• Jan 09 2025

எமது அரசு எந்த அரசியல் பழிவாங்கலையும் முன்னெடுக்காது! பிரதியமைச்சர் அருண் திட்டவட்டம்

Chithra / Dec 30th 2024, 10:25 am
image


 

சட்டத்தின் மூலம் மட்டுமே நாங்கள் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார்.

மூதூர் -சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், அனாமிகா நினைவுப் பேருரையும்,  கலை இலக்கிய ஒன்று கூடலும், விருது வழங்கல் நிகழ்வும் மூதூர் சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தோடு பல்துறை கலைஞர்கள் 8 பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது தோப்பூரைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் எம்.என்.எம்.புஹாரி ஊடகத் துறைக்கான இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நினைவுச் சின்னமும் பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்த சிறப்பித்தார்.ஏனைய அதிதியாக தமிழ்நாட்டு பேராசிரியர் கி.பார்த்திபராஜா கலந்து சிறப்பித்திறந்தமை குறிப்பிடத்தக்கது.


எமது அரசு எந்த அரசியல் பழிவாங்கலையும் முன்னெடுக்காது பிரதியமைச்சர் அருண் திட்டவட்டம்  சட்டத்தின் மூலம் மட்டுமே நாங்கள் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார்.மூதூர் -சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், அனாமிகா நினைவுப் பேருரையும்,  கலை இலக்கிய ஒன்று கூடலும், விருது வழங்கல் நிகழ்வும் மூதூர் சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.இந்நிகழ்வின் பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தோடு பல்துறை கலைஞர்கள் 8 பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது தோப்பூரைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் எம்.என்.எம்.புஹாரி ஊடகத் துறைக்கான இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.அத்தோடு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நினைவுச் சின்னமும் பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்த சிறப்பித்தார்.ஏனைய அதிதியாக தமிழ்நாட்டு பேராசிரியர் கி.பார்த்திபராஜா கலந்து சிறப்பித்திறந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement