2009க்கு பின்னர் தமிழ் தேசியம் சார்ந்த காட்சிகள் பிளவுபட்டு காணப்படுகின்றது. இந்நிலையில் நாங்கள் அனைவரும் இணைந்து தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்காக ஒருமித்த குரலாக செயல்பட வேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை இன்றையதினம்(11) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர்களும் ஏனைய கட்சியில் உள்ளவர்களும் வந்து எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்.
அந்தவகையில் தான் நாங்கள் நேற்று வரையில் சிந்தித்து, நேற்றையதினம் தான் ஒரு முடிவு எடுத்தோம். அதன் அடிப்படையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு சார்பில் போட்டியிட தீர்மானித்தோம். அதனடிப்படையில் இன்றையதினம் வேட்புமனுவை தாக்கல் செய்தோம் - என்றார்.
அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதே எமது நோக்கம்- தவராசா தெரிவிப்பு. 2009க்கு பின்னர் தமிழ் தேசியம் சார்ந்த காட்சிகள் பிளவுபட்டு காணப்படுகின்றது. இந்நிலையில் நாங்கள் அனைவரும் இணைந்து தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்காக ஒருமித்த குரலாக செயல்பட வேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை இன்றையதினம்(11) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இளைஞர்களும் ஏனைய கட்சியில் உள்ளவர்களும் வந்து எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம். அந்தவகையில் தான் நாங்கள் நேற்று வரையில் சிந்தித்து, நேற்றையதினம் தான் ஒரு முடிவு எடுத்தோம். அதன் அடிப்படையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு சார்பில் போட்டியிட தீர்மானித்தோம். அதனடிப்படையில் இன்றையதினம் வேட்புமனுவை தாக்கல் செய்தோம் - என்றார்.