• Nov 25 2024

கோட்டாவை விரட்டிய இடத்திலிருந்து எமது பயணம் ஆரம்பம்...! ரணில், ராஜபக்ச தரப்பின் இறுதி மேதின நிகழ்வு இது...! முஜிபுர் ரஹ்மான் சூளுரை...!

Sharmi / May 2nd 2024, 10:06 am
image

ரணில், ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டணியில் இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இன்றாகும்(01) என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை மே தினம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டிணைவில் இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இதுவாகும்.

எதிர்வரும் மே தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலமாகும். மக்கள் அபிமானத்தை வென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தின் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும். 

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினம் இடம்பெறும் இந்த இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

அன்று கோட்டாபய உள்ளிட்ட ராஜபக்ஷ தரப்பினரை விரட்டியடிப்பதற்கு மக்கள் வெள்ளம் அணிதிரண்ட முதலாவது இடம்.

132 பேரின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவும். பொதுஜன பெரமுன எனும் கள்வர் கூட்டமும் விரைவில் வீடு செல்ல நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.




கோட்டாவை விரட்டிய இடத்திலிருந்து எமது பயணம் ஆரம்பம். ரணில், ராஜபக்ச தரப்பின் இறுதி மேதின நிகழ்வு இது. முஜிபுர் ரஹ்மான் சூளுரை. ரணில், ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டணியில் இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இன்றாகும்(01) என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இம்முறை மே தினம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும்.ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டிணைவில் இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இதுவாகும்.எதிர்வரும் மே தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலமாகும். மக்கள் அபிமானத்தை வென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தின் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினம் இடம்பெறும் இந்த இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.அன்று கோட்டாபய உள்ளிட்ட ராஜபக்ஷ தரப்பினரை விரட்டியடிப்பதற்கு மக்கள் வெள்ளம் அணிதிரண்ட முதலாவது இடம்.132 பேரின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவும். பொதுஜன பெரமுன எனும் கள்வர் கூட்டமும் விரைவில் வீடு செல்ல நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement