• Nov 22 2024

பொதுத் தேர்தல் கண்காணிப்பு கடமையில் குதிக்கும் 5000 பேர்! பெப்ரல் அமைப்பு திட்டம்

Chithra / Oct 6th 2024, 9:11 am
image

 

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் ஐயாயிரம் பேரை கடமையில் அமர்த்தவுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த விடயத்தை பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் நான்காயிரம் பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

பொதுத் தேர்தலின் போது நீண்ட கால அடிப்படையிலான கண்காணிப்பாளர்களாக 200 பேர் வாகனங்களுடன் நியமிக்கப்பட உள்ளனர்.

பொதுத் தேர்தலின் போது விருப்பு வாக்குகளும் எண்ணப்படும் காரணத்தினால் வாக்கு எண்ணும் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெப்ரல் திட்டமிட்டுள்ளது. 

பொதுத் தேர்தல் கண்காணிப்பு கடமையில் குதிக்கும் 5000 பேர் பெப்ரல் அமைப்பு திட்டம்  எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் ஐயாயிரம் பேரை கடமையில் அமர்த்தவுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.இந்த விடயத்தை பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் நான்காயிரம் பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.பொதுத் தேர்தலின் போது நீண்ட கால அடிப்படையிலான கண்காணிப்பாளர்களாக 200 பேர் வாகனங்களுடன் நியமிக்கப்பட உள்ளனர்.பொதுத் தேர்தலின் போது விருப்பு வாக்குகளும் எண்ணப்படும் காரணத்தினால் வாக்கு எண்ணும் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெப்ரல் திட்டமிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement