• Nov 22 2024

நான்கு மாதங்களில் 800க்கும் மேற்பட்ட பாதாள உறுப்பினர்கள் கைது - பொலிஸ் மா அதிபர்

Chithra / Jul 15th 2024, 2:06 pm
image

  

இதேவேளை சமூகத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கு போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி கடந்த மூன்று நான்கு மாதங்களில் 800க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டரை மாதங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை, 

அண்மைய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

தற்போது நான்கில் மூன்று பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய சிலர் தற்போது நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இது தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.


நான்கு மாதங்களில் 800க்கும் மேற்பட்ட பாதாள உறுப்பினர்கள் கைது - பொலிஸ் மா அதிபர்   இதேவேளை சமூகத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கு போதே அவர் இதனை தெரிவித்தார்.அதன்படி கடந்த மூன்று நான்கு மாதங்களில் 800க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த இரண்டரை மாதங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை, அண்மைய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.தற்போது நான்கில் மூன்று பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய சிலர் தற்போது நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.மேலும் வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இது தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement