• Jul 11 2026

3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற பாதஹேவாஹெட்ட தவிசாளர் கைது

dorin / Jul 10th 2026, 10:53 am
image

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு, நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியிருந்த பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்கு, நீதிமன்றம் முன்னதாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

எனினும், நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தான் வசித்து வந்த கண்டி, மாரஸ்ஸன பகுதியை விட்டு வெளியேறி, இரகசியமாகத் தலைமறைவாகியிருந்தார்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாகச் செயல்பட்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று (09) கிரில்லவல, இம்புல்கொட பகுதியில் வைத்து பிரதேச சபை தலைவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸாரின் அறிவுரைக்கு அமைவாகவே தான் அவ்வப்போது தங்குமிடங்களை மாற்றி தலைமறைவாக இருந்ததாகச் சந்தேக நபரான பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற பாதஹேவாஹெட்ட தவிசாளர் கைது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு, நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியிருந்த பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்கு, நீதிமன்றம் முன்னதாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.எனினும், நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தான் வசித்து வந்த கண்டி, மாரஸ்ஸன பகுதியை விட்டு வெளியேறி, இரகசியமாகத் தலைமறைவாகியிருந்தார்.கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாகச் செயல்பட்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று (09) கிரில்லவல, இம்புல்கொட பகுதியில் வைத்து பிரதேச சபை தலைவரைக் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸாரின் அறிவுரைக்கு அமைவாகவே தான் அவ்வப்போது தங்குமிடங்களை மாற்றி தலைமறைவாக இருந்ததாகச் சந்தேக நபரான பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement