• Jul 10 2026

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு புதிய வாழ்க்கை! சாதித்த இலங்கை மருத்துவர்கள்

Chithra / Jul 10th 2026, 11:14 am
image


இலங்கையின் மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் போற்றப்படும் வகையில், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட  அறுவை சிகிச்சை பேராதெனியவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பேராதெனிய போதனா மருத்துவமனை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த நிபுணர் மருத்துவர்கள் குழு, கடந்த ஜூன் 10 ஆம் திகதி இந்த மிகச் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது.


இதன்போது, ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான லினுலி தருல்யா மற்றும் லித்துலி மனுல்யா ஆகியோர் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டனர்.


2021 ஆம் ஆண்டு மாவனெல்லை, அரநாயக்க பகுதியில் பிறந்த இந்த இரட்டையர்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிபுணர் மருத்துவர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்து வந்தனர்.


அறுவை சிகிச்சைக்கு முன்னதாக, அவர்களின் உடல்நிலை தொடர்பாக விரிவான மருத்துவ ஆய்வுகள், துல்லியமான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகவும் சிக்கலான குழந்தைகள் அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மருத்துவச் சாதனையின் மூலம், இரட்டையர்களும் தற்போது தனித்தனி குழந்தைகளாக வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.


இந்த வரலாற்றுச் சாதனை, இலங்கை மருத்துவ நிபுணர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் உலகத் தரத்திலான நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவதாக பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு புதிய வாழ்க்கை சாதித்த இலங்கை மருத்துவர்கள் இலங்கையின் மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் போற்றப்படும் வகையில், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட  அறுவை சிகிச்சை பேராதெனியவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேராதெனிய போதனா மருத்துவமனை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த நிபுணர் மருத்துவர்கள் குழு, கடந்த ஜூன் 10 ஆம் திகதி இந்த மிகச் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது.இதன்போது, ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான லினுலி தருல்யா மற்றும் லித்துலி மனுல்யா ஆகியோர் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டனர்.2021 ஆம் ஆண்டு மாவனெல்லை, அரநாயக்க பகுதியில் பிறந்த இந்த இரட்டையர்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிபுணர் மருத்துவர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்து வந்தனர்.அறுவை சிகிச்சைக்கு முன்னதாக, அவர்களின் உடல்நிலை தொடர்பாக விரிவான மருத்துவ ஆய்வுகள், துல்லியமான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகவும் சிக்கலான குழந்தைகள் அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மருத்துவச் சாதனையின் மூலம், இரட்டையர்களும் தற்போது தனித்தனி குழந்தைகளாக வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.இந்த வரலாற்றுச் சாதனை, இலங்கை மருத்துவ நிபுணர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் உலகத் தரத்திலான நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவதாக பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement