புத்தளம் மாவட்டத்தின் உடப்பு கடற்கரையில் இன்று (09) அதிகாலை 50 கிலோவுக்கும் அதிக எடையுடைய அரிய வகை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி காணப்பட்டது.
தற்போது வீசிவரும் தென்மேல் பருவக்காற்றின் தாக்கத்தால் கடல் உயிரினங்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய இந்த கடலாமை, கடல் உயிரினங்களில் அருகிவரும் இனத்தைச் சேர்ந்ததாகவும், இயந்திரப் படகுகளின் "வலிச்சல்" வலைகளில் சிக்கிய பின்னர் உயிரிழந்ததால் கடலில் வெட்டி வீசப்படுவதாகவும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், கரையொதுங்கியுள்ள கடலாமையின் சடலத்தால் கடலோரப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், இதனை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடப்பில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய அரிய கடலாமை புத்தளம் மாவட்டத்தின் உடப்பு கடற்கரையில் இன்று (09) அதிகாலை 50 கிலோவுக்கும் அதிக எடையுடைய அரிய வகை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி காணப்பட்டது.தற்போது வீசிவரும் தென்மேல் பருவக்காற்றின் தாக்கத்தால் கடல் உயிரினங்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய இந்த கடலாமை, கடல் உயிரினங்களில் அருகிவரும் இனத்தைச் சேர்ந்ததாகவும், இயந்திரப் படகுகளின் "வலிச்சல்" வலைகளில் சிக்கிய பின்னர் உயிரிழந்ததால் கடலில் வெட்டி வீசப்படுவதாகவும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும், கரையொதுங்கியுள்ள கடலாமையின் சடலத்தால் கடலோரப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், இதனை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.