மித்தேனிய, குடகல்ஆர பகுதியில் அமைந்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட ‘தெம்பிலிலஹுரு’ என்பவரின் வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (08) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, குறித்த வீட்டில் அவரது தாயாரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தீ விபத்தில் அவரது தாயாருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீ காரணமாக வீடு பலத்த சேதமடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மித்தேனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குற்றவாளி 'தெம்பிலிலஹுரு'வின் வீட்டிற்கு தீ வைப்பு அதிர்ஷ்டவசமாக தப்பிய தாய் மித்தேனிய, குடகல்ஆர பகுதியில் அமைந்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட ‘தெம்பிலிலஹுரு’ என்பவரின் வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளது.நேற்று (08) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, குறித்த வீட்டில் அவரது தாயாரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும், தீ விபத்தில் அவரது தாயாருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.தீ காரணமாக வீடு பலத்த சேதமடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மித்தேனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.