• Apr 02 2025

மூதூரை வந்தடைந்த கதிர்காம திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை...! ஏராளமான யாத்திரிகர்கள் பங்கேற்பு...!

Sharmi / Jun 3rd 2024, 10:06 am
image

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழா கொடியேற்றத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை இன்று(03) காலை மூதூரை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கடந்த மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான இப் பாத யாத்திரையானது, எதிர்வரும் ஜுலை 06 ஆம் திகதி கதிர்காமத்தில் இடம்பெறும் கொடியேற்றத்தின் போது கதிர்காமத்தைச் சென்றடையவுள்ளது.

இதனையிடையே பாத யாத்திரை குழுவினர் ஒவ்வொரு ஆலயங்களாக தரிசித்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.

குறித்த பாத யாத்திரையில் ஆண்கள், பெண்கள் என 88 பேர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூதூரை வந்தடைந்த கதிர்காம திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை. ஏராளமான யாத்திரிகர்கள் பங்கேற்பு. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழா கொடியேற்றத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை இன்று(03) காலை மூதூரை வந்தடைந்தது.யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கடந்த மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான இப் பாத யாத்திரையானது, எதிர்வரும் ஜுலை 06 ஆம் திகதி கதிர்காமத்தில் இடம்பெறும் கொடியேற்றத்தின் போது கதிர்காமத்தைச் சென்றடையவுள்ளது.இதனையிடையே பாத யாத்திரை குழுவினர் ஒவ்வொரு ஆலயங்களாக தரிசித்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.குறித்த பாத யாத்திரையில் ஆண்கள், பெண்கள் என 88 பேர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement