கந்தளாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பரட்டைக்காடு, எரிக்கிலம் காடு, வட்டுக்கச்சி, பேராறு முதலாம் கண்டம் போன்ற பல்வேறு பகுதிகளில் வயல் நிலங்கள் மழையினால் அறுவடை செய்யமுடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளின் வேளாண்மை செய்கைகள் ஆரம்பத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த வேளையில் மீண்டும் ஏற்பட்ட தொடர் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அறுவடைக்கு இயந்திரங்களை வயலுக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
வேளாண்மை செய்கைகள் நிலத்தில் கீழே விழுந்து, நெற்பயிர்கள் அழுகிய நிலையில் காணப்படுவதால், அறுவடை செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாகவும்,
நாங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போனால் தாம் சிறுபோகம் செய்ய முடியாத நிலையும் காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நட்ட ஈட்டுத்தொகையை வெகு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
அறுவடைக்கு தயாரான நெற் செய்கை மழையால் பாதிப்பு கந்தளாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பரட்டைக்காடு, எரிக்கிலம் காடு, வட்டுக்கச்சி, பேராறு முதலாம் கண்டம் போன்ற பல்வேறு பகுதிகளில் வயல் நிலங்கள் மழையினால் அறுவடை செய்யமுடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.விவசாயிகளின் வேளாண்மை செய்கைகள் ஆரம்பத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த வேளையில் மீண்டும் ஏற்பட்ட தொடர் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் அறுவடைக்கு இயந்திரங்களை வயலுக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.வேளாண்மை செய்கைகள் நிலத்தில் கீழே விழுந்து, நெற்பயிர்கள் அழுகிய நிலையில் காணப்படுவதால், அறுவடை செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாகவும்,நாங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போனால் தாம் சிறுபோகம் செய்ய முடியாத நிலையும் காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நட்ட ஈட்டுத்தொகையை வெகு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.