இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தி இருக்கிறது.
அந்தவகையில் இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ள அதேவேளை பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, இந்தியாவுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் உரிமையைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்தியாவுக்கு சார்க் நாடுகள் விசா வழங்குவதையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
மேலும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்தது.
அத்துடன், ஏப்ரல் 27 முதல் அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீதும், காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மீதும் அதிரடி தாக்குதலை இந்தியா நடத்தும் என்றும் சர்வதேச அளவில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தி இருக்கிறது.அந்தவகையில் இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ள அதேவேளை பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.தொடர்ந்து, இந்தியாவுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் உரிமையைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.அதேவேளை இந்தியாவுக்கு சார்க் நாடுகள் விசா வழங்குவதையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.மேலும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்தது. அத்துடன், ஏப்ரல் 27 முதல் அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.மேலும், ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீதும், காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மீதும் அதிரடி தாக்குதலை இந்தியா நடத்தும் என்றும் சர்வதேச அளவில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.