• Apr 14 2026

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மனில் பங்குனித் திங்கள் உற்சவம்!

shanu / Mar 16th 2026, 5:27 pm
image

ஈழத்தின் புகழ் பூத்த கண்ணகை அம்மன் ஆலயங்களில் ஒன்றாகிய யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய முதலாவது பங்குனி திங்கள் உற்சவம் இன்று(16) சிறப்பாக இடம்பெற்றது. 


கண்ணகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.  


வழமை போன்று பக்தர்கள் விரதம் இருந்து, பொங்கல் பொங்கி, பாற்குடம் மற்றும் காவடிகள் எடுத்து, தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்வது வழக்கம். அதேபோன்றும் இன்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். 


ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற திங்கள் கிழமைகள் கண்ணகி அம்மனுக்குரிய சிறப்பான நாட்களாக கருதப்படுகின்றன.


இந்த நாட்களில் பெண்கள்,திருமண பாக்கியம் வேண்டியும், கணவன் மனைவி உறவு சிறக்க வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும்  விரதமிருந்து கண்ணகி அம்மனின் அருளைப் பெறுவர்.

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மனில் பங்குனித் திங்கள் உற்சவம் ஈழத்தின் புகழ் பூத்த கண்ணகை அம்மன் ஆலயங்களில் ஒன்றாகிய யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய முதலாவது பங்குனி திங்கள் உற்சவம் இன்று(16) சிறப்பாக இடம்பெற்றது. கண்ணகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.  வழமை போன்று பக்தர்கள் விரதம் இருந்து, பொங்கல் பொங்கி, பாற்குடம் மற்றும் காவடிகள் எடுத்து, தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்வது வழக்கம். அதேபோன்றும் இன்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற திங்கள் கிழமைகள் கண்ணகி அம்மனுக்குரிய சிறப்பான நாட்களாக கருதப்படுகின்றன.இந்த நாட்களில் பெண்கள்,திருமண பாக்கியம் வேண்டியும், கணவன் மனைவி உறவு சிறக்க வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும்  விரதமிருந்து கண்ணகி அம்மனின் அருளைப் பெறுவர்.

Advertisement

Advertisement

Advertisement