• Sep 16 2024

2024ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டி- தங்க பதக்கம் வென்று அசத்திய ஈழதமிழ் இளைஞன்!

Tamil nila / Sep 6th 2024, 7:36 pm
image

Advertisement

2024ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டியில் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

F52 வட்டு எறிதலுக்கான போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் ஒரே நாளில் அவர் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையையும் நிலை நாட்டியுள்ளார்.

இந்தப் போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். எனினும் சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார்.

தொடர்ந்து 27.06 மீட்டர் தூரத்தை எறிந்து, உலக சாதனையுடன் இத்தாலிக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

ரிகிவன் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு 1999 இல் ரோமில் பிறந்தார். பதினெட்டு வயதில், அவருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது.

2019ஆம் ஆண்டு அவரது உடல் நிலை மோசமடைந்து ரோமில் உள்ள சாண்டா லூசியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்ஆரம்பத்தில் அவர் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டம் விளையாடினார்.

இருப்பினும்  2023ஆம் ஆண்டு ஷாட் புட் F55 மற்றும் வட்டு எறிதல் F54-55 பிரிவுகளில் இத்தாலிய பாராலிம்பிக் சாம்பியனானார்.

இதற்கமைய  வரும் நாட்களில் ஈட்டி எறிதலிலும் கலந்து கொண்டு தனது சாதனைகளுக்கு மேலும் ஒரு பதக்கம் சேர்க்கும் நம்பிக்கையில் ரிகிவன் உள்ளார்.


2024ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டி- தங்க பதக்கம் வென்று அசத்திய ஈழதமிழ் இளைஞன் 2024ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டியில் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.F52 வட்டு எறிதலுக்கான போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் ஒரே நாளில் அவர் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையையும் நிலை நாட்டியுள்ளார்.இந்தப் போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். எனினும் சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார்.தொடர்ந்து 27.06 மீட்டர் தூரத்தை எறிந்து, உலக சாதனையுடன் இத்தாலிக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.ரிகிவன் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு 1999 இல் ரோமில் பிறந்தார். பதினெட்டு வயதில், அவருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது.2019ஆம் ஆண்டு அவரது உடல் நிலை மோசமடைந்து ரோமில் உள்ள சாண்டா லூசியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்ஆரம்பத்தில் அவர் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டம் விளையாடினார்.இருப்பினும்  2023ஆம் ஆண்டு ஷாட் புட் F55 மற்றும் வட்டு எறிதல் F54-55 பிரிவுகளில் இத்தாலிய பாராலிம்பிக் சாம்பியனானார்.இதற்கமைய  வரும் நாட்களில் ஈட்டி எறிதலிலும் கலந்து கொண்டு தனது சாதனைகளுக்கு மேலும் ஒரு பதக்கம் சேர்க்கும் நம்பிக்கையில் ரிகிவன் உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement