மிக விரைவில் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதன் பின்னர் நான் மீண்டும் அரசியலுக்குள் வருவேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேதெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது.
அதேவேளை, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்றைய ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தனது விளக்கத்தினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்; நான் மீண்டும் வருவேன் - டயானா சபதம் மிக விரைவில் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதன் பின்னர் நான் மீண்டும் அரசியலுக்குள் வருவேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேதெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும்.எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது.அதேவேளை, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்றைய ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தனது விளக்கத்தினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.