• Nov 28 2024

பாராளுமன்ற தேர்தல்- யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 44 வேட்பு மனுக்கள் ஏற்பு..!

Sharmi / Oct 12th 2024, 12:40 pm
image

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட வேட்பு மனுக்களில் நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு இன்று(11) நண்பகல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

அந்தவகையில், இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல்- யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 44 வேட்பு மனுக்கள் ஏற்பு. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட வேட்பு மனுக்களில் நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு இன்று(11) நண்பகல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டது.இந்நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.அந்தவகையில், இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement