• Aug 19 2025

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

shanuja / Aug 19th 2025, 9:58 am
image

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

அதன்படி காலை  09.30 - 10.00 மணிவரை  பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளது. 


மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 


இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு, பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 2443/14ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2441/14ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை என்பன குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 


இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்தக்தினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.அதன்படி காலை  09.30 - 10.00 மணிவரை  பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளது. மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு, பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 2443/14ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2441/14ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை என்பன குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்தக்தினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement