பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள். மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். மு.ப. 11.30 - பி.ப. 5.00 இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளது. பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை உள்ளடங்கலாக அமர்வுகள் இடம்பெறவுள்ளன.