• Mar 21 2025

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த முக்கிய கட்சிகள்

Chithra / Mar 20th 2025, 2:40 pm
image

 

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற   தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில்  தாக்கல் செய்தது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 01 மாநகர சபை, 02 நகர சபைகள் மற்றும் 08 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி துஷாரி தென்னகோன் முன்னிலையில் கையளித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து  வேட்பு மனுவை  தாக்கல் செய்தனர்.


இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று காலை நுவரெலியா மாவட்டம் செயலகத்தில்  தாக்கல் செய்தது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து  வேட்பு மனுவை  தாக்கல் செய்தனர்.


அத்தோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  இன்றைய தினம்(20) நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தார்

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில், 2025 உள்ளூராட்சி மன்றம் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. வளப்பனை பிரதேச சபை மாத்திரம் நாட்காளி சின்னத்தில் போட்டியிடுகின்றது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகரசபை, ஹட்டன்-டிக்கோயா நகரசபை, தலவாக்கலை-லிந்துள்ள நகரசபை மற்றும் மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, அம்பகமுவ, கொத்மலை, வளப்பனை, ஹங்குராகெத்த பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்றைய தினம்(20) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கடைமைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக காரியாலயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா உயர்மட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த முக்கிய கட்சிகள்  2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற   தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில்  தாக்கல் செய்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 01 மாநகர சபை, 02 நகர சபைகள் மற்றும் 08 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி துஷாரி தென்னகோன் முன்னிலையில் கையளித்தனர்.தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து  வேட்பு மனுவை  தாக்கல் செய்தனர்.இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று காலை நுவரெலியா மாவட்டம் செயலகத்தில்  தாக்கல் செய்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து  வேட்பு மனுவை  தாக்கல் செய்தனர்.அத்தோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  இன்றைய தினம்(20) நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தார்மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில், 2025 உள்ளூராட்சி மன்றம் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. வளப்பனை பிரதேச சபை மாத்திரம் நாட்காளி சின்னத்தில் போட்டியிடுகின்றது.மேலும் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகரசபை, ஹட்டன்-டிக்கோயா நகரசபை, தலவாக்கலை-லிந்துள்ள நகரசபை மற்றும் மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, அம்பகமுவ, கொத்மலை, வளப்பனை, ஹங்குராகெத்த பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்றைய தினம்(20) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கடைமைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக காரியாலயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா உயர்மட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement