• Apr 02 2025

பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினர்..! பொலிஸார் வலைவீச்சு

Chithra / Mar 17th 2024, 1:35 pm
image

 பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த மாணவனின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை, பந்துராகொட நகரில் வைத்து  உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் தாக்கியுள்ளார்.

பந்துராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் பின்னர் சந்தேகத்திற்குரியவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக குறித்த முன்னாள் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினர். பொலிஸார் வலைவீச்சு  பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த மாணவனின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.கடந்த 11ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை, பந்துராகொட நகரில் வைத்து  உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் தாக்கியுள்ளார்.பந்துராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.தாக்குதலின் பின்னர் சந்தேகத்திற்குரியவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக குறித்த முன்னாள் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement