• Sep 08 2024

பாசிக்குடா முனை முருகன் கோவில் வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு...!

Sharmi / Jul 13th 2024, 3:50 pm
image

Advertisement

பாசிக்குடா முனைமுருகன் கோவில் வீதி    போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர்களினால் வைபவ ரீதியாக இன்று(13)  காலை திறந்து வைக்கப்பட்டது.

இவ் வீதியானது 1.54 கிலோமீற்றர் தூரமுடையதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்கு வருகை தந்துள்ள அமைச்சர் இன்றைய நிகழ்வில் முதன் நிகழ்வாக இவ் வீதியினை திறந்து மக்கள் பாவனைக்கு கையளித்ததுடன் அவ் வீதியால் முணைமுருகன் ஆலயத்திற்கு சென்று முருகனை தரிசித்ததுடன் ,வருகை தந்ததன் நினைவாக மரக் கன்றுகள் நடுகை செய்து கொண்டார்.

குறித்த வீதியானது கடந்த 30 வருடகால யுத்தத்தினால் மக்கள் பாவனைக்கு பயன்படாத நிலை காணப்பட்டது.

வீதியின் அருகாமையில் கல்குடா இராணுவ முகாம் அமைந்துள்ளதால் இவ் நிலைமை ஏற்பட்டிருந்தது.

அத்துடன் வீதியானது நீண்ட காலமாக குண்டும்,குழியுமாக காணப்பட்டது.

குறித்த வீதியால் ஆலயத்திற்கு வழிபடச் செல்வோர்,மீன் பிடித் தொழிலுக்கு செல்வோர் மற்றும் சுற்றுலா பயணிகள் என பலரும் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்வதில் பல்வேறு பட்ட துன்பங்களை அனுபவித்து வந்தனர்.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எடுத்த துரித முயற்சியினால் இவ் வீதி இன்று மக்கள் பாவனைக்கு ஏற்ற வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டு பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.


பாசிக்குடா முனை முருகன் கோவில் வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு. பாசிக்குடா முனைமுருகன் கோவில் வீதி    போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர்களினால் வைபவ ரீதியாக இன்று(13)  காலை திறந்து வைக்கப்பட்டது.இவ் வீதியானது 1.54 கிலோமீற்றர் தூரமுடையதாகும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்கு வருகை தந்துள்ள அமைச்சர் இன்றைய நிகழ்வில் முதன் நிகழ்வாக இவ் வீதியினை திறந்து மக்கள் பாவனைக்கு கையளித்ததுடன் அவ் வீதியால் முணைமுருகன் ஆலயத்திற்கு சென்று முருகனை தரிசித்ததுடன் ,வருகை தந்ததன் நினைவாக மரக் கன்றுகள் நடுகை செய்து கொண்டார்.குறித்த வீதியானது கடந்த 30 வருடகால யுத்தத்தினால் மக்கள் பாவனைக்கு பயன்படாத நிலை காணப்பட்டது.வீதியின் அருகாமையில் கல்குடா இராணுவ முகாம் அமைந்துள்ளதால் இவ் நிலைமை ஏற்பட்டிருந்தது.அத்துடன் வீதியானது நீண்ட காலமாக குண்டும்,குழியுமாக காணப்பட்டது.குறித்த வீதியால் ஆலயத்திற்கு வழிபடச் செல்வோர்,மீன் பிடித் தொழிலுக்கு செல்வோர் மற்றும் சுற்றுலா பயணிகள் என பலரும் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்வதில் பல்வேறு பட்ட துன்பங்களை அனுபவித்து வந்தனர்.இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எடுத்த துரித முயற்சியினால் இவ் வீதி இன்று மக்கள் பாவனைக்கு ஏற்ற வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டு பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement