• Dec 14 2024

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டியால் பரபரப்பு...!

Sharmi / Jul 13th 2024, 3:37 pm
image

யாழ் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று மதியம் 01 மணியளவில் முச்சக்கர வண்டி  ஒன்று தீடீரென தீப்பற்றியுள்ளது.

நெல்லியடி பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த முச்சக்கர வண்டிக்கு பெற்றோல் நிரப்பட்டு சென்று கொண்டிருந்த போதே யாழ் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி தீப்பற்றியுள்ளது.

இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதுடன் குறித்த முச்சக்கரவண்டி முற்றாக எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டியின் பெற்றோல் நிரப்பு கலன் ஊடான ஒழுக்கினால் திடீரென தீப்பற்றி இருக்கலாம் என தெரியவருகின்றது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளினை  நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டியால் பரபரப்பு. யாழ் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று மதியம் 01 மணியளவில் முச்சக்கர வண்டி  ஒன்று தீடீரென தீப்பற்றியுள்ளது.நெல்லியடி பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த முச்சக்கர வண்டிக்கு பெற்றோல் நிரப்பட்டு சென்று கொண்டிருந்த போதே யாழ் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி தீப்பற்றியுள்ளது.இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதுடன் குறித்த முச்சக்கரவண்டி முற்றாக எரிந்துள்ளது.முச்சக்கரவண்டியின் பெற்றோல் நிரப்பு கலன் ஊடான ஒழுக்கினால் திடீரென தீப்பற்றி இருக்கலாம் என தெரியவருகின்றது.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளினை  நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement