இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது
பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை, தலைமன்னார் மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் உட்பட பல்வேறு மூலோபாய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்தரையாடலில் ஆராயப்பட்டடது.
மேலும் கடல்சார், விமானப் போக்குவரத்துத் துறைகளை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதற்கும் இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.
கடல்சார் மற்றும் விமான சேவைத் துறைகளில் ஈடுபட ஆர்வமுள்ள இந்திய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கப்பல் மற்றும் சிறிய கைவினைக் கட்டுமானத் தொழில்களுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தி திருகோணமலை துறைமுகப் பகுதியில் முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை - இந்திய துறைமுகங்களை இணைக்கும் பயணிகள் படகு சேவைகள் விரைவில். உயர்ஸ்தானிகர் உறுதி இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதுபலாலி விமான நிலையம், காங்கேசன்துறை, தலைமன்னார் மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் உட்பட பல்வேறு மூலோபாய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்தரையாடலில் ஆராயப்பட்டடது.மேலும் கடல்சார், விமானப் போக்குவரத்துத் துறைகளை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதற்கும் இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.கடல்சார் மற்றும் விமான சேவைத் துறைகளில் ஈடுபட ஆர்வமுள்ள இந்திய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.மேலும், கப்பல் மற்றும் சிறிய கைவினைக் கட்டுமானத் தொழில்களுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தி திருகோணமலை துறைமுகப் பகுதியில் முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.