• May 13 2024

விடுதலைப் புலிகளின் தலைவரை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! - சீமான் கருத்து

Chithra / Dec 29th 2023, 2:34 pm
image

Advertisement

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அதி உயர் பற்றுக் கொண்டு தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்  என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

உடல் நலக் குறைவால் நேற்றையதினம் உயிரிழந்த பிரபல தென்னிந்திய நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

திரையுலகில் தன்னுடைய புரட்சிகரமான நடிப்பினால், கலைஞர் கருணாநிதி அவர்களால் புரட்சிக் கலைஞர் என்று விஜயகாந்த் கௌரவிக்கப்பட்டார். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது, கேப்டன் விஜயாந்திற்கு இருந்த பற்றின் காரணமாக அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டு கேப்டன் பிரபாகரன் என்று தன்னுடைய 100ஆவது படத்திற்கு பெயர் வைத்தார். அந்த படம் மாபெரும் வெற்றியீட்டியது. 

தன்னுடைய இரசிகர்களால் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

அவர் ஒரு சிறந்த போராளி என்பதற்கு சான்று, தமிழீழ மண்ணில் தமிழ் மக்கள் துயருற்று நின்ற காலத்தில் அவரே தலைமையேற்று பெரும் படையைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்ததையும், காவேரி நதி நீர் எமக்கு மறுக்கப்பட்டபோதும் படைகளைத் திரட்டி அவர் பாரிய  போராட்டம் மேற்கொண்டதையும் சொல்லிக் கொண்டே போகலாம். 

பசியை உணர்ந்தவர், பட்டிணிக் கிடந்தவர், ஆனால் அவரால் பசியாறியவர்கள் ஆயிரக்கணக்கானோர். அவர் அதிகம் படிக்கவில்லை, ஆனால் அவரால் படித்து மேன்மையடைந்தவர்கள் இங்கு ஏராளம் என குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவரை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த் - சீமான் கருத்து  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அதி உயர் பற்றுக் கொண்டு தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்  என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். உடல் நலக் குறைவால் நேற்றையதினம் உயிரிழந்த பிரபல தென்னிந்திய நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். திரையுலகில் தன்னுடைய புரட்சிகரமான நடிப்பினால், கலைஞர் கருணாநிதி அவர்களால் புரட்சிக் கலைஞர் என்று விஜயகாந்த் கௌரவிக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது, கேப்டன் விஜயாந்திற்கு இருந்த பற்றின் காரணமாக அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டு கேப்டன் பிரபாகரன் என்று தன்னுடைய 100ஆவது படத்திற்கு பெயர் வைத்தார். அந்த படம் மாபெரும் வெற்றியீட்டியது. தன்னுடைய இரசிகர்களால் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.அவர் ஒரு சிறந்த போராளி என்பதற்கு சான்று, தமிழீழ மண்ணில் தமிழ் மக்கள் துயருற்று நின்ற காலத்தில் அவரே தலைமையேற்று பெரும் படையைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்ததையும், காவேரி நதி நீர் எமக்கு மறுக்கப்பட்டபோதும் படைகளைத் திரட்டி அவர் பாரிய  போராட்டம் மேற்கொண்டதையும் சொல்லிக் கொண்டே போகலாம். பசியை உணர்ந்தவர், பட்டிணிக் கிடந்தவர், ஆனால் அவரால் பசியாறியவர்கள் ஆயிரக்கணக்கானோர். அவர் அதிகம் படிக்கவில்லை, ஆனால் அவரால் படித்து மேன்மையடைந்தவர்கள் இங்கு ஏராளம் என குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement